மாயமான் (Tamil Edition)

125.00

Description

மாயமான் (Tamil Edition)
Price: ₹125.00
(as of Aug 05, 2024 18:01:41 UTC – Details)


நாயகனாக நடிப்பவன் வந்துவிட்டான் ராஜ உடையில்.
“வாங்கம்மா!”
சுனிதா அருகில் வந்தாள்.
“இவர் உங்க காதலன். உங்களைக் குதிரையில கடத்திட்டுப் போற மாதிரி ‘சீன்’.”
நடுவில் ஒருவன்,
“இதுக்கும், ‘டீ’ விளம்பரத்துக்கும் என்ன சார் சம்பந்தம்?”
“இந்த ‘டீ’ நிறுவனம் உலக ‘மார்க்கெட்’டை கையில வச்சிருக்கு. நிறைய செலவு பண்ணி வித்தியாசமா படம் தயாரிக்கச் சொல்வாங்க. குதிரையில போகும்போது பாதில டீ குடிப்பார்!”
“தலைவா! சரித்திர காலத்துல ‘டீ’ உண்டுங்களா?”
“கிண்டலா? சினிமாவுல மட்டும் ‘லாஜிக்’ இருக்காடா? கடைசியில இதைக் கனவுனு முடிச்சிட்டு, சுனிதா குபீர்னு எழுந்து உட்காருவா. உடனே அம்மா ‘டீ’ கொண்டு வருவாங்க. அதை அப்புறமா ‘ஷூட்’ பண்ணுவேன்!”
“சார்… ‘காமிரா ரெடி’!”
– ‘காமிரா மேன்’ குரல் கொடுத்தான்.
“சந்தோஷ் ‘ரெடி’யா? குதிரையில ஏற ‘டூப்’ வேணுமா?”
“வேணாம். எனக்கு பயிற்சி இருக்கு சார்!”
“சுனிதாவை ஏற்ற!”
“நான் பார்த்துக்கிறேன். ஒரு ‘மானிட்டர்’ பார்த்துடலாமா?”
“கண்டிப்பா…”
“நீங்க ‘ஷாட்’ வைங்க!”
குதிரையும், சந்தோசும் ‘ஃபிரேமில்’ இருந்து அகற்றப்பட, சுனிதா போலவே சரித்திர உடைகள் தரித்த ஏழெட்டு துணை நடிகைகள் வெளிப்பட்டார்கள்.
“நீங்க எல்லாரும் சுனிதாவோடு சிரிச்சிப் பேசிட்டு இந்தக் கடற்கரையில நடந்து வரணும்.”
“சரி சார்!”
‘மூமென்ட்ஸ்’களை டைரக்டர் சொல்லிவிட்டார்.
“’குளோசப்ஸ்’ அப்புறம் எடுத்துக்கிறேன் சுனிதா. வாங்க எல்லாரும்!”
அவர் சொன்னபடி அவர்கள் சிரித்துப் பேசியபடி நடந்து வர,
“சந்தோசுக்கு ‘கீ’ கொடுப்பா!”
“சார் நீங்க வாங்க!”
சந்தோஷ் குதிரையில் ஏறி வந்தான்.
சுனிதா அருகில் கொண்டு வந்து நிறுத்தினான்.
அவள் மிரண்டு விழிக்க,
குதிரை வந்த வேகத்தில்… தோழிகள் சிதறி ஓட….
“வா… அந்தப்புரம் போகலாம்!”
“முடியாது. யார் நீங்கள்?”
“உன்னை அடையத் துடிக்கும் அங்கத நாட்டு மன்னன்!”
சுனிதா திரும்பி ஓடத் தொடங்க,
பாய்ச்சலாக வந்து குபீரென அவளை அள்ளி குதிரையில் அவன் அமர்த்த…
“கட்…!” என குரல் வர…
‘காமிரா’ நின்றது.
“குதிரையோடு சந்தோஷ் வந்த உடனே இந்த ‘சீன்’ அப்படியே தொடரணும். இதே மாதிரி ஒரே ‘டேக்’ல வந்தா பிரமாதமா இருக்கும். ம்… போகலாமா சந்தோஷ்.”
“போலாம் சார்.”
“சுனிதாவைத் தூக்கி குதிரையில ஏத்திக்கிட்டு, கொஞ்சம் வேகமாக நூறடி போகட்டும். அந்த வேகத்தை கொஞ்சம் ‘மிட் ஷாட்’ல எடுத்துக்கிறேன். ஒரே ‘ஸ்டிரோக்’ல செய்வாங்களா?”
“முயற்சிக்கிறோம் சார்!”
ஈஸ்வர் ருசிகரமாக காட்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றான்.
வெயில் வரத் தொடங்கியது.
சந்தோஷ், சுனிதா இருவரும் ‘டச்சப்’ செய்துகொண்டார்கள்.
துணை நடிகைகள் மீண்டும் தயாரானார்கள்.
குதிரையின் அருகில் வந்து அதன் முதுகைத் தடவித் தந்தான் சந்தோஷ்.
“ம்… ‘ரெடி’யா?”
“‘ரெடி’ சார்!”
“ஸ்டார்ட் காமிரா’!”
“‘ரோலிங் சார்’!”
“ஆக்ஷன்!”- டைரக்டர் கத்த…
‘ஃப்ரேம்’க்கு வெளியே இருந்த சந்தோஷ் தாவி… குதிரையில் ஏறி தயாராக இருந்தான்.
சுனிதா தோழிகளுடன் பேசிக்கொண்டே வர…
இணை இயக்குநர் தனது கட்டை விரலை உயர்த்த,
சந்தோஷ் குதிரையுடன் வந்தான்.
பேச்சு தொடங்கியது!
தோழிகள் சிதற,
சுனிதாவை நெருங்கி சந்தோஷ் பேச,
அவள் ஓடத் தொடங்க,
குதிரை வேகமாக பின்தொடர, ஒரு மலர்க்கொத்தை அள்ளுவது போல அவளை அள்ளி எடுத்து குதிரையில் கிடத்தினான் சந்தோஷ்.
அதன் பிடரியில் ஒரு மாதிரி ‘சங்கேத பாஷை’யில் இரண்டு தட்டுத் தட்ட,
நாலு கால் பாய்ச்சலில் புயல் போல குதிரை பறக்க,
‘காமிரா’ அவசரமாக அதை காட்சியாக விழுங்கியது.
குதிரை நொடியில் கண்ணைவிட்டு மறையும். தூரம் போய்விட,
“‘கட்’”
“இன்னொரு ‘டேக்’ எடுத்தா ‘பெட்டரா’ இருக்குமா?”
“சரி சார்!”
“வரட்டும் அவங்க!”
பத்து நிமிடங்கள் கரைந்துவிட்டன.
குதிரையில் போன சந்தோஷ், சுனிதா திரும்பவே இல்லை.
டைரக்டருக்குக் கலவரம் தட்டியது!

ASIN ‏ : ‎ B0DBV8MT6N
Publisher ‏ : ‎ Geeye Publications (31 July 2024)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 524 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 68 pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “மாயமான் (Tamil Edition)”

Your email address will not be published. Required fields are marked *