இதயம் போகுதே! (Tamil Edition)

188.00

Description

இதயம் போகுதே! (Tamil Edition)
Price: ₹188.00
(as of Aug 05, 2024 19:01:38 UTC – Details)


குழந்தை பிறந்த 6 மாதம் வரையில் வித்யா பிறந்த வீட்டில் தான் இருந்தாள்.
அதன் பிறகு வேலையில் சேர்ந்து விட்டாள்.
தினசரி காலையில வீட்டு வேலைகளைச் செயலானாள். முதலில் தன் மேல குற்றம் வைக்கக்கூடாது என்று தருணைக் கிளப்பிவிட்டாள்.
“உங்கம்மா இங்கே வந்து குழந்தையை பாத்துக்கட்டும். கேக்கலைனு வரக்கூடாது. கேட்டுங்க.”
“நீயும் வா வித்யா.”
“நான் வர்றேன். ஆனா பேச மாட்டேன். பேசறது நீங்கதான்.”
இருவரும் குழந்தையுடன் போனார்கள். ஆறுமாதக் குழந்தை யாரிடமும் ஒட்டவில்லை.
“ஒரே பேரன்-பிள்ளை வழிப் பேரன். குடும்ப வாரிசு. ஆனா பாட்டி என்கிட்ட ஒட்டலியே.”
“உன் கண்ல அவனை இவங்க காட்டாதப்ப, எப்படிம்மா உன்கிட்ட ஒட்டுவான்?”
“இதப்பாரு சுமதி, பிரசவம் ஆகி ஆறுமாசம் வரைக்கும் வித்யா அங்கேதான் இருந்திருக்கா. இந்த 6 மாசத்துல 2 தடவைதான் அம்மாவை கூட்டிட்டு வந்திருக்கீங்க, அவன் மேல பாசத்தை யாரும் காட்டலியே?”
“நீயே அந்த வீட்லதானே விழுந்து கிடக்கே?”
“சரி, வித்யா, குழந்தை நம்ம வீட்டுக்கு வந்தாச்சு, அம்மாவை கூட்டிட்டுப் போகத்தான் வந்திருக்கேன்.”
“நெனைச்சோம், அவ வேலைக்குப் போகணும் புள்ளையை பார்த்துக்க ஆளில்லை. தேவைனா மட்டும்தானே வருவீங்க?”
தருண் முகம் மாறியது
ஏன் சுமதி இப்படி பேசற?
“அம்மா என்ன வேலைக்காரியா?”
“பேரனை பாத்துக்கற பாட்டிகள் யாருமே வேலைக்காரியில்லை. பாசத்துக்கு தப்பான பேரை சூட்டறது சரியில்லை.”
தருண் படக்கென பதில் சொல்ல,
“நல்லா பேசக் கத்துக் குடுத்துட்டாங்க!”
“அதம்மா அது உங்க வீடு. நான் உங்களைக் கூப்பிடறது பாசாங்கா இருக்கும்.”
“அது அம்மாவீடா? எதுக்கு இந்த நடிப்பு? அது உன் வீடு.”
“செய்யறதெல்லாமே நீ, அம்மா ஒரு பொம்மை மாதிரி, சோபா நாற்காலி மாதிரி அங்கே ஜடமா இருந்தாங்க. எந்த உரிமையும் கிடையாது. அப்புறம் அது எப்படிஅவங்க வீடாகும்?”
“இதப்பாரு சுமதி, அம்மாவை எந்த வேலையும் நாங்க செய்ய விடலை.”
“புரியுது விருந்தாளிகளை வேலை வாங்குவோமா? விருந்தாளிக்குப் பேரு அம்மா.”
வித்யா எழுந்தாள்.
“போகலாமா தருண்?”
“பாத்தியா ஒப்புக்கு வந்திருக்கா, அவளுக்கு இங்கே இருக்கப் பிடிக்கலை.”
“இதப்பாருங்க, உங்க பிள்ளை கேட்டார். உங்க பேரனைப் பாத்துட்டு அவன்கூட வந்து இருக்க, உங்களுக்குப் பிடிக்கலை. உங்களைக் கஷ்டப்படுத்தாம ஒரு பேபி சிஸ்டரை வேலைக்கு வைக்கவும் நான் தயார். நீங்க மேற்பார்வை பார்த்தா மட்டும் போதும்.”
“குழந்தை பேபி சிஸ்டர்கிட்ட ஒட்டற அளவுக்குக் கூட அம்மா கிட்ட ஒட்டாது.”
“தருண், எல்லாம் செஞ்சு தர, நாம தயாரா இருந்தும், எதுக்கும் அவங்க இணங்கலை. இனிமே நீங்க பேசி லாபமில்லை புறப்படுங்க.”
“வித்யா நில்லு,” மாமியாரின் குரல் பெரிதாக,
“சொல்லுங்க,”
“என் பிள்ளையை நிரந்தரமா எங்கிட்டேயிருந்து பிரிச்சிட்டே, என் பேரனை மடில போட்டு வளர்க்கற வாய்ப்பும் எனக்கில்லாம செஞ்சிட்டே.”
“நிறுத்தும்மா, இப்ப எதுக்கு உன்னை கூப்பிடறோம்? முழுசா நீ கஷ்டப்படாம, அதே சமயம் குழந்தை உன் பார்வைல வளரணும்… அதோட பாட்டி நீ அதைப் பார்த்து சந்தோஷப்படணும்னு தான் இங்கே வந்தோம். எல்லாத்தையும் எதிர்க்கற நீ, அவளைக் குறை சொல்றது சரியில்லை.
விடும்மா அவன் விலை போய் பல மாசங்களாச்சு.
தப்பு சுமதி, தாய்-தகப்பன்கிட்டேயிருந்து புருஷனை பிரிக்கற மனைவிகளைவிட, பெத்தவங்ககிட்டேயிருந்து சகோதரனை பிரிக்கற சகோதரிகளின் எண்ணிக்கை அதிகமாகுது. என்ன சொன்னாலும் தப்பா பேசினா எப்படி? கூப்பிட்டா வராத குழந்தைகூட பாசத்தோட எடுத்துக் கொஞ்சினா வரும். அம்மாவும் இவனைத் தூக்கி வச்சுக்க ஆசைப்படலை. அத்தை உனக்கும் அந்தப் பாசமில்லை. நான் மாமனா இருந்து உன் பிள்ளைகளுக்கு இப்ப வரைக்கும் செஞ்சிட்டுத்தான் இருக்கேன். சொல்லிக் காட்டலை. பாசம்கூட ரெண்டு பக்கமும் இருக்கணும். அது ஒரு வழிப்பாதையா இருக்கக்கூடாது. புறப்படு வித்யா.
டேய் நான் வந்துர்றேன்..
இல்லைம்மா, விரும்பாம நீ வர வேண்டாம். நாங்க வந்து பாத்துக்கறோம். பெண்கள் வீட்டுக்காக உழைக்கற அம்மாக்கள் தான் அதிகம். தாய்ப்பாசம் வேணும்னு ஆசைப்பட்டா, மகனாப் பிறக்கக்கூடாது. பிறந்தா கல்யாணம் வரைக்கும்தான் கிடைக்கும். மகளுக்கு அது ஆயுள் முழுக்கக் கிடைக்கும். குழந்தையை கொண்டா, தருண் வாசலில் இறங்கி நடக்க,
வித்யா அவர்களிடம் சொல்லிக் கொண்டு வாசலுக்கு வந்து காரில் ஏறினாள். காரை எடுத்தாள்.
தருண் குழந்தையை மடியில் வைத்தபடி பக்கத்தில்.
இவன் சேலையை கட்டிக்கலாம். பேபி சிஸ்டர் தேவையே இல்லை. இவனே போதும்.
சுமதி அம்மாவின் எரிச்சலைக் கூட்டினாள்.

ASIN ‏ : ‎ B0DBV241W5
Publisher ‏ : ‎ Geeye Publications (31 July 2024)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 627 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 123 pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “இதயம் போகுதே! (Tamil Edition)”

Your email address will not be published. Required fields are marked *